
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஊழல், மோசடி மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோருக்கு சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக, உறுப்பினர்களாக இருந்த பலரும் பல்வேறு வகையான மோசடிகள், குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்தனர்.
மேலும் சிலர் கடந்த தேர்தல்களின்போது சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கும் நோக்கிலும் செயற்பட்டிருந்தனர்.
இவ்வாறானவர்களின் செயற்பாடு காரணமாக அதிருப்தியடைந்த இளம் தலைமுறையினர் கட்சியை விட்டு தூரமாகிச் சென்றதன் காரணமாகவே சுதந்திரக் கட்சி கடந்த தேர்தல்களில் பின்னடைவொன்றை எதிர் கொண்டது.
எனவே அவ்வாறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்ற தலைவர் அல்லது உறுப்பினருக்கும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.