ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைக்கும் உலகின் டாப் 10 நாடுகள் 

188

ஊழல் மற்றும் லஞ்சத்தில் உலகின் பல்வேறு நாடுகள் திளைத்து வருகின்றன. எந்த நாட்டில் ஊழல் அதிகரிக்கிறதோ அந்நாட்டின் மக்களின் வறுமையும் அதிகரித்து கொண்டே தான் செல்லும்.

அதன்படி, Transparency International அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள டாப் 10 ஊழல் நாடுகளில் பட்டியல் இதோ,

சோமாலியா

பாதுகாப்பற்ற நாடாகவும் ஊழலின் உச்சத்தை தொட்ட நாடாகவும் சோமாலியா திகழ்கிறது. இங்கு சட்ட விரோதமான செயல்களை செய்ய அரசு அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் வாங்குகிறார்கள்.

எல்லா துறையிலுமே ஊழல் இங்கு மலிந்துள்ளது.

வட கொரியா

சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வட கொரியாவின் பொருளாதாரம் மிகவும் மர்மமாகவே உள்ளது. நாட்டு மக்களுக்கு தேவையான உணவுகளை கூட சரியாக வழங்காத அரசாங்கமே இங்கு செயல்படுகிறது.

பல்வேறு நாடுகளில் அரசு அதிகாரிகளு நல்ல ஊதியம் வழங்கப்படும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால் அதிகாரிகள் அதிகளவில் ஊழலில் ஈடுபடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் போதை பொருளான ஹெராயின் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் மோசமாக ஊழல் செய்து அதில் சிக்கி கொண்டவர் ஆவார்.

சூடான்

ஊழலின் சிக்கி திளைக்கும் சூடானை ஆளுவது சூடான் தேசிய காங்கிரஸ் இயக்கமாகும். எல்லா துறையிலும் ஊழல் இருக்கும் இங்கு பொலிஸ் துறை ஊழல் அதிகமாகவே உள்ளது.

தென் சூடான்

கடந்த 2011ல் சுதந்திர நாடாக உருவெடுத்த தென் சூடானில் பாரம்பரியமான அரசாங்க கட்டமைப்புகள் இல்லாததால் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளது.

அங்கோலா

எண்ணெய் உற்பத்தியில் சிறந்த நாடாக இருந்தாலும் அங்கோலாவின் அரசாங்க அதிகாரிகள் அதிகளவில் நாட்டின் சொத்துக்களை சொந்தமாக்கி ஊழலில் ஈடுபடுகிறார்கள்.

லிபியா

அதிகளவு போராட்டங்கள் நடப்பதாக அறியப்படும் இந்நாட்டில் ராணுவ துறையில் மிக பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுகின்றன.

ஈராக்

ஈராக்கின் பரந்த செல்வம் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்து வகையான தொழில்துறைக்கும் உகந்ததாக இருந்தாலும் ஊழலும் அதிகளவு இங்கு நடக்கிறது.

வெனிசுலா

எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்கும் வெனிசுலாவில் நாட்டுக்கு கிடைக்கும் வருமானமானது மக்களின் நலன்களுக்கு செல்லாமல் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு தான் அதிகம் செல்கிறது.

கினி-பிஸ்ஸாவ் (Guinea-Bissau)

அதிகம் அறியப்படாத கினி-பிஸ்ஸாவ் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும். அதிகளவில் குற்ற செயல்கள் நடக்கும் இங்கு ஊழலும் அதிகமாக உள்ளது.

SHARE