ஊழியரை அடித்தே கொன்ற கரடிக்கு நேர்ந்த நிலை

170

சுவீடன் வனவிலங்கு பூங்காவில் ஊழியரை தாக்கி கொன்ற கரடியை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

Orsaவில் உள்ள வனவிலங்கு பூங்காவிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது கரடி கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருப்பதாக தவறாக கருதிய பூங்கா ஊழியர், கரடியின் கூண்டிற்கு அருகே சென்று சுத்தம் செய்ய சென்றுள்ளார்.

இந்நிலையில், திடீரென வந்த கரடி ஊழியரை தாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஊழியரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், ஊழியரை காப்பாற்ற முயன்ற முயற்சியின் போது 2 வயதான கரடி சுட்டுக்கொல்லப்பட்டதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் வனவிலங்கு பூங்காவிற்கு விரைந்த பொலிசார், பூங்காவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE