ஊவா மாகாணத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகள் தமக்கு உடனடியாக தொழில் வழங்கக்கோரி நாளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாளை மறியல் போராட்டம் இடம்பெறுவதுடன் அன்றைய தினம் தொடக்கம் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளனர்.
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தேசிய கொள்கைக்கு ஊவா மாகாண சபை இனங்காமல் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்காமல் இருந்து வருகின்றது. ஊவா மாகாண சபையின் இச் செயற்பாட்டிற்கு பலத்த கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டமும், உடன் தொழில் வாய்ப்பினை வழங்க வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டமும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஊவா மாகாண தொழில் வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகள் சங்கத் தலைவர் மனுஸ்க ஸ்ரீ பிரபாத் மேற்படிதகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.