எகிப்தில் தற்கொலைப்படை இராணுவம் மோதல் ஏழு பேர் பலி…!

250

எகிப்து நாட்டின் சினாய் மாகாணத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் இடுப்பில் வெடிமருந்தை கட்டிக்கொண்டு சோதனை சாவடியில் பணிபுரியும் வீரர்களை நோக்கி வந்துள்ளான். இதைக்கண்ட ராணுவ வீரர்கள் அவனை மடக்கி பிடித்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்களும் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெடி மருந்தை கட்டிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

SHARE