துருக்கி நாட்டை சேர்ந்த 35 பேர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி ஜேர்மனியில் விண்ணப்பித்துள்ளாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் கடந்த ஜீலை மாதம் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதனையடுத்து இராணுவத்தினருக்கு துணைபோனதாக பல்லாயிரக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், வேலைகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில் 35 பேர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி, துருக்கி ராஜாந்திர கடவுச்சீட்டுகளுடன் இடம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும் இந்த எண்ணிக்கை உறுதியானது இல்லை என ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.