எங்களை காப்பாற்றுங்கள்! தீவிரவாதிகளிடம் சிக்கிய இரண்டு நபர்கள் பேசிய அதிர்ச்சி வீடியோ

199

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் Timothy Weekes, இவரும் அமெரிக்கவை சேர்ந்த Kevin King என்பவரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி இவர்கள் இருவரையும் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியாத நிலையில் அவர்கள் இருவரையும் தலிபான் தீவிரவாதிகள் பேச வைத்துள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Timothy பேசும் போது, டொனால்ட் ட்ரம்ப் அவர்களே நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும். தலிபான் தீவிரவாதிகளுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றால் அவர்கள் எங்களை கொலை செய்து விடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

Пропустить рекламу

இன்னொரு பணைய கைதியான Kevin கூறுகையில், எங்களை கடத்தியவர்கள் எங்களுக்கு சரியான உணவுகள் தருகிறார்கள், எங்களை எப்படியாவது இங்கிருந்து விடுவியுங்கள்.

எங்களால இங்கிருந்து உயிர் இழக்க முடியாது. யாராவது எங்களை காப்பாற்றுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

முன்பு இருந்ததை விட உடல் இளைத்தும் பொலிவிழந்தும் Timothy மற்றும் Kevin வீடியோவில் காணப்பட்டனர்.

போன வருடம் செப்டம்பர் மாதமே அமெரிக்க ராணுவத்தினர் இவர்கள் இருவரையும் மீட்க எடுத்த முயற்சியானது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE