எங்கள் காதல் இந்த நடிகரால் தான் உருவானது- முதன் முறையாக தன் காதல் கதையை கூறிய அசின்

425

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர் அசின். இவர் சமீபத்தில் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்து இவர் அளித்துள்ள பேட்டியில் ‘ஹவுஸ்புல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்ல விமான நிலையத்தில் நானும் அக்‌ஷய் குமார் நின்றுக்கொண்டு இருந்தோம்.

அப்போதும் அக்‌ஷய் தான், ராகுலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், அதை தொடர்ந்து உனக்கு ஏற்ற ஜோடி ராகுல் மிஸ் செய்யாதே என்றார்.

ராகுலும் என் தொலைப்பேசி எண்ணை வாங்கி கொண்டார், பின் என் வீட்டிற்கே நேரடியாக வந்து என் அப்பாவிடம் ‘உங்கள் மகளை நான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்’ என கேட்டார்.

இருவருக்குமே பிடித்து விட்டதால் அப்பாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார், குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக செல்கின்றது’ என அசின் கூறியுள்ளார்.

asin_marriage001

SHARE