எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 16 பெண்கள் இதில் யாரை தேர்வு செய்ய போகிறார் ஆர்யா என்பது தெரியவில்லை.
அதற்காக பல போட்டிகள் பெண்கள் இடையே நடந்தது. நிகழ்ச்சியும் முடிவுக்கு வரும் நிலையில் இப்போது ஐந்து பெண்கள் மட்டுமே மீதம் உள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்காக பெண்கள் சில ஸ்பெஷல் விஷயங்களை செய்து அவருடன் நேரத்தை செலவிட்டனர்.
ஆனால் ஆர்யா, போட்டியாளர் அகாதாவுக்கு மட்டும் அவரே ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார். அதாவது அகாதாவின் நீண்டநாள் கனவான தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மற்ற பெண்கள் ஆர்யாவுக்காக சில விஷயங்கள் செய்த நிலையில் அவரோ அகாதாவுக்காக ஸ்பெஷலாக செய்துள்ளார். இதனை பார்க்கும் போது ஆர்யா மனதை கவர்ந்தவர் அகாதா தானோ, இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்துகொள்ள போகிறார்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.