எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் சுசானாவின் மகன் ஆர்யாவிடம் விடுத்த வேண்டுகோள்

176

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஆர்யாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களும் ரசிகர்களிடம் பிரபலம் என்றே கூறலாம்.

அதிலும் அபர்ணதி, அகாதா போன்றவர்களுக்கு ஓவியா போல் ஆர்மியும் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் சுசானா விவாகரத்து ஆனவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய மகன் நெய்டனும், ஆர்யாவும் வெளியில் சென்றிருந்தனர், அதை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினர்.

அப்போது நெய்டன், ஆர்யாவிடம் நான் விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாராம். இதனை சுசானா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

SHARE