எச்சரிக்கையுடன் தப்பித்தார் வாட்சன்

254

WATSON_2537723f_2537742f

ராய்ப்பூரில் நடந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டரான வாட்சன் தகாத வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்தியதால் நடுவர் அவரை எச்சரித்து உள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. விராட் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

போட்டியின் போது பெங்களூரு வீரர் வாட்சன் பந்தை டெல்லி அணி வீரர்கள் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடிக்கும் போது தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிகிறது. அதேபோல் பேட்டிங் செய்து அவுட்டாகி செல்லும் போதும் திட்டிக்கொண்டே சென்றுள்ளார்.

இந்த விவகாரம் மைதான நடுவர் கவனத்திற்குச் சென்றதால், நடுவர் அவரை அழைத்து கண்டித்துள்ளார்.

அதாவது, வாட்சனின் இந்த செய்கை ஐ.பி.எல். நன்னடத்தை விதி 2.1.4-ன் கீழ் முதல் நிலை வரம்பிற்குள் வந்ததால் நடுவர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

மும்பை– குஜராத் இடையேயான ஆட்டத்தின் போது போல்லார்ட்– பிராவோ இருவரும் ஐபிஎல் நன்னடத்தை விதியை மீறியதால் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE