எச்சரிக்கை வேலியை தாண்டியதால் விபரீதம்: பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்

175

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கில் ஈடுப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலைஸ் மாகாணத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த சனிக்கிழமை அன்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளான்.

Riederalp என்ற பகுதிக்கு சென்ற சிறுவன் பனிச்சறுக்கு விளையாட தேவையான உபகரணங்களை பொருத்திக்கொண்டு விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளான்.

அப்போது, சறுக்கி சென்ற இடத்திற்கு அருகில் எச்சரிக்கை வேலி ஒன்றை சிறுவன் தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

வேலியை தாண்டிய அச்சிறுவன் அந்த இடத்தில் இருந்த அதாள பள்ளத்தில் விழுந்துள்ளான்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சிறுவனை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை அளித்துள்ளனர்.

பின்னர், மருத்துவ ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு பேர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால், படுகாயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE