எச்.என்.டி.ஏ. மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அறி்க்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி மத்துரட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று பிரசனமாகியுள்ளார்.
அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், இந்த தாக்குதல் நடாத்தப்படவில்லை என அவர் இதன்போது சாட்சியமளித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடமைகளில் ஈடுபட்டிருந்த உயர் பொலிஸ் அதிகாரி என்ற விதத்தில் மாணவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.