எட்டாவது பாராளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு

688
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது.

இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார்.

இந்தநிலையில் ஏனைய யோசனைகள் அற்ற நிலையில் கரு ஜெயசூரிய சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால! குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா திலங்கவின் பெயரை முன்மொழிந்தார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வழி மொழிந்துள்ளார்.

அதேநேரம் குழுக்களின் பிரதிதலைவராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த தெரிவுகள் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றன.

 

SHARE