எண்பது வருட பாடசாலை வரலாற்றினை மாற்றிய மாணவனுக்கு உதவிகள்

262

எண்பது வருட பாடசாலை வரலாற்றினை மாற்றிய மாணவனுக்கு Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று(04) குறித்த மாணவனின் வீட்டிற்கு சென்று இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தனர்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/ககு/ நாசிவன்தீவு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் திலிப்குமார் சனுஜன் என்ற மாணவன் 164 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

மேலும், பாடசாலை ஆரம்பித்து 80 வருடங்கள் கழிந்த நிலையில் மேற்படி மாணவன் முதல் தடைவையாக இப் பரீட்சையில் தகைமை பெற்று சித்திபெற்றிருந்தார்.

அவரது பெற்றோருடன் மாணவன் எதிர்கால கல்வி வளர்ச்சி பற்றி கலந்துரையாடியதுடன், மாணவனுக்கு தேவையான பயிற்சிப்புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-22 625-0-560-320-160-600-053-800-668-160-90-23 625-0-560-320-160-600-053-800-668-160-90-24 625-0-560-320-160-600-053-800-668-160-90-25 625-0-560-320-160-600-053-800-668-160-90-26

SHARE