ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனி தலைமையிலான இந்திய அணியில் பைஸ் ஃபஸல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்குர் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார். விராட் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணிக்கு அஜிங்க்ய ரஹானே துணை அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் வீரர் வினோத் காம்பிளி கடுமையாக விமரிசித்துள்ளார்.
தேர்வுக்குழுவினருக்கு ஒரு யோசனையும் கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு எந்த மாதிரியான அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்? புஜாரா, ஜடேஜா, சாஹா மற்றும் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள்! எதன் அடிப்படையில், புஜாரா,சாஹா, ஜடேஜா ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளார்கள்?
புஜாராவும் சாஹாவும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. தேர்வுக்குழுவினரே, தயவு செய்து விளக்குங்கள் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து யூன் 11 முதல் 22 வரை ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
I am really pissed off the kind of selection is going on from the time I entered n departed from the team.They have destroyed careers