எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று மக்களை வீதிக்கு இழுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளே!!!
மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு மக்களின் வாக்குகளால் பதவி சுகத்தை அனுபவிக்கும் நீங்கள் உங்கள் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி எத்தனை போராட்டங்களை நடத்தி எதை சாதித்துள்ளீர்கள்?
எல்லாவற்றுக்கும் மக்கள் தான் வீதியில் இறங்க வேண்டும் என்றால் உங்களுக்கு எதற்கு அதிகாரங்கள், பதவிகள் ?
#மகாவலிக்கு எதிராக #முல்லையில் #போராட்டம்.#mullaiththeevu
Posted by Mayutharan Sriramachandaran on Isnin, 27 Ogos 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள், இவை தவிர டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா, அங்கஜன், என்று வட-கிழக்கில் 19 உறுப்பினர்கள் இவர்களுடன் மலையக , கொழும்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும் இணைந்து இதுவரை பாராளுமன்றத்தில் ஏதாவது ஓர் வெளிநடப்போ அல்லது சிங்கள அரசாங்கத்தை ஈர்க்கும் வகையில் ஏதாவது போராட்டம் செய்துள்ளீர்களா?
எல்லோரும் தமிழ் மக்களின் வாக்குகளால் வந்தவர்கள் தானே? எல்லோரும் மக்களுக்காக என்று தானே கூறுகின்றீர்கள் பின்பு எதற்கு உங்களுக்குள் ஒற்றுமை இன்மை?
கண்டி கலவரத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் வரை தரையில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள் அதை நீங்கள் பார்க்க வில்லையா? அவர்களும் இலங்கை பாராளுமன்றத்தில் தானே உள்ளார்கள்?
அவர்களால் முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது?
25 ஆண்டுகளாக நான் பெரிது நீ பெரிது என்று எமக்குள்ளே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறுதியில் முள்ளிவாய்காளில் ஒட்டுமொத்தமாக எமது இனத்தை காவு கொடுத்ததை மறந்து விட்டீர்களா?
முல்லைத்தீவில் நிலம் பறிபோகின்றது என்று கூச்சல் போடும் நீங்கள் இதுவரை 5 அனுமதி பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்கான ஆதாரத்தை யாராவது வைத்துள்ளீர்களா அவ்வாறு இருந்தால் ஏன் ஜனாதிபதியிடம் இன்று சமர்பிக்கவில்லை?
முல்லைத்தீவு அதிகாரி மறுத்த போது ஏன் உங்களால் நிருபிக்க முடியவில்லை? ஏதற்காக கூட்டங்களில் கலந்து கொள்கிறீர்கள் ? மக்கள் குறைகளை எடுத்துக் கூறி தீர்வு காண்பதற்கா? அல்லது கதிரைகளை அலங்கரித்து தேனீர் அருந்தி விருந்து சாப்பிடவா போகின்றீர்கள்?
தீர்வு , தீர்வுக்கு பின் அபிவிருத்தி என்று இதுவரை மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு இப்போது தேர்தல் நெருங்குவதால் அரசியல் தீர்வோடு அபிவிருத்தியும் தேவை என்று சுடலை ஞானம் பிறந்துள்ளது இதை தானே நாங்கள் கடந்த பல வருடங்களாக சொல்லி வருகின்றோம் அப்போது உங்கள் காதுகளுக்கு அது கேட்க வில்லையா?
அன்பார்ந்த மக்களே, அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் ஓரே நேர்கோட்டில் முன் எடுத்து செல்லக் கூடிய தலைமைகளே எமது இன்றைய தேவை , இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் போலி தேசியம் , தீர்வு என்று இதுவரை மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பினருக்கு இப்போது தான் சுடலை ஞானம் பிறந்துள்ளது நீங்கள் ஒவ்வொருவரும் கேள்வி கேட்கும் காலம் வரும் போதுதான் அவர்கள் விழித்துக் கொண்டு செயல் படுவார்கள் அல்லது உங்கள் வாழ்வு கேள்விக் குறியாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
28.08.2018 இன்று ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் இன அழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை “மகாவலி அபிவிருத்தி திட்டம்” என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதியில் சிங்களக்குடியேற்றம். முஸ்லீம் குடியேற்றம் செய்கின்றது ஸ்ரீலங்கா அரசு. இதனை முற்றாக ஏற்றுக்கொள்ளாத தமிழ் மக்கள் தமது தாயக மண்னை எந்த இனவாதிகளும் சுபீகரிக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு நடவடிக்கையாக முல்லைத்தீவில் இராயப்பர் ஆலயமுன்றலில் இருந்து முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டம் செய்தனர். தமது தாயக நிலத்தை யாரும் சூரையாடவிடமாட்டோம் என்று மக்கள் கடும் சீற்றத்துடன் ஆவேஷமடைந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவே தமிழ்மக்களின் பாரியளவிலான எதிர்ப்புபோராட்டமாகும் என்பதும் குறிப்படத்தக்கது…. தமிழ்மக்களின்