மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போன்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு காணப்படுகின்றது.ஆகஸ்ட் 17 ம்திகதி தேர்தலில் அது வெற்றிபெற தவறியது,ஐக்கிய தேசிய கட்சியை விட 11 ஆசனங்களை குறைவாக பெற்றது,இதன் காரணமாக அதனால் அரசை அமைக்கமுடியாத நிலை உருவானது.
இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாவது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த சிலரிற்கு சிறந்த விடயமாக காணப்பட்ட அதேவேளை அதன் ஏனைய உறுப்பினர்களிற்கு முக்கிய எதிர்கட்சியாக செயற்படுவதே ஓரு வழியாக காணப்பட்டது.
எனினும் சபாநாயகர் கருஜெயசூர்யவின் அறிவிப்பு அவர்களது இந்த நம்பிக்கைகளையும் தகர்த்துள்ளது.அவர்தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை புதிய எதிர்கட்சி தலைவராக அறிவித்தார்.அவர் மாத்திரமே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் வேறு எவரும் நியமிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே அந்த நியமனம் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு தனக்கு அந்த பதவியில் ஆர்வம் இல்லை என கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த அறிவிப்பு எதிர்கட்சியில் அமர விரும்பிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிற்கு சீற்றத்தை உண்டுபண்ணியது.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் தாங்கள் தனித்து செயற்படப்போவதாக தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கமவை எதிர்கட்சி தலைவராக்கும்படி ஜனாதிபதியை கோரியவர்கள் இவர்களேநாங்கள் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளோம், அதில் நாங்கள் தனித்து செயற்படப்போவதாக தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்தார். அதன் பின்னர் எங்களிடம்போதிய பலம் உள்ளதால் எங்களை சேர்ந்த ஓருவரை சபாநாயகராக ஏற்றுக்கொள்ளும்படியும் ஜனாதிபதியை கோருவோம்,ஜனாதிபதி குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு நாங்கள் விடுத்த வேண்டுகொளை செவிமடுப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அதனை செவிமடுக்கவில்லை எனவும் விமல் குறிப்பிட்டார்.
56 உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதற்கான அனுமதியை ஜனாதிபதியிடமிருந்து முன்கூட்டியே பெற்றுவிட்டனர்,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் இதற்கான அனுமதியை பெற்றோம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்ட 56 பேரும் மீண்டும் அரசில் இணையமுடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஸ்வவர்ணபால சபாநாயகரிற்கு எழுதிய கடிதமே அனைத்திற்கும் காரணம், அந்த கடிதத்தில் 95 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 82 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை விரும்பவில்லை எனவும் வர்ணபால தெரிவித்திருந்தார்.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஏனைய கட்சியினரிற்கு 13 ஆசனங்களே உள்ளன- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்கள் உள்ளன அதனாலேயே அவர்களிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி சென்றது என சபாநாயகர் தங்களிடம் தெரிவித்ததாகவும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் புதிய பதில் செயலாளரை நியமிப்பதில் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனினும் ஜே.வி;பி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை நிராகரித்துள்ளார்.பாராளுமன்றத் தில் ஆறு அரசியல்கட்சிகள் மாத்திரமே மக்களை பிரதிநிதித்துவம் செய்துள்ளன,இதில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு ஆகியன அரசாங்கத்தில் உள்ளன,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தாங்கள் அரசாங்கத்தின் பக்கம் அமரபோவதாக தெரிவித்துள்;ளார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி 3 கட்சிகள் மாத்திரமே எதிர்கட்சியில் அமரலாம்,பாராளுமன்ற சம்பிராதாயங்களின் படி எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே செல்லவேண்டும்,என்றார் ஜே..வி;;பி தலைவர்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் 56 உறுப்பினர்களின் வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.உண்மையான எதிர்கட்சியிலிருந்தே எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கடிதத்தை சமர்ப்பித்தோம்,ஜனாதிபதி அந்த கடிதம் குறித்து நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துள்ளார்.
தற்போது எதிர்கட்சியாக செயற்படுவதற்கு எங்களிடம் போதிய பலம் உள்ளதால் எங்களிற்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம்,சபாநாயகர் இது குறித்து முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்