எதிர்கால ஆசிரிய நியமனங்களின்போது சாரணர்,கெடட் மாணவர்களுக்கு முன்னுரிமை-பிரதமர்

235
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களை வழங்கும் போது சாரணர் மற்றும் கெடட் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட சாரணர் ஜம்போரியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.
மாணவர்களுக்கான பிரமாண்டமான அமைப்பாக உலக சாரணர் அமைப்பு திகழ்கிறது.
இலங்கை சாரணர் தலைமையகம், கொழும்பு மாவட்ட சாரணர் அமைப்புடன் இணைந்து இந்த ஜம்போரியை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெறும் சாரணர் ஜம்போரியில் 6000 இற்கும் அதிகமான குருளை சாரணர்கள் பங்குபற்றியுள்ளனர்.
SHARE