எதிர்கால திட்டம் என்ன? இன்று ஆராய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

260

 

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வவுனியாவில் கலந்துரையாடி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 

இந்தவிடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சட்டத்தரணி செல்வரட்ணம் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தகலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்கால திட்டம் என்ன? இன்று ஆராய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றவுள்ளதாக கூட்டமைப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், வவுனியாவில் நடைபெறவுள்ளதாக, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் தொடர்பாகவும், கட்சியின் எதிர்க்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.

இந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tna

tna01

tna03
1

SHARE