எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் -பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

187

இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் சமீபத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட வேளை  அரசமைப்பையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்காக பௌத்தமத பீடாதிபதிகள் காட்டிய அக்கறையை பிரதமர் பாராட்டியுள்ளார்

மாவனல்லயில் புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கையாள்வதற்காக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியை நியமித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசமைப்பை உருவாக்கும்போது  பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கும் ஏற்பாட்டில் மாற்றங்கள் இருக்காது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE