எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த ரணில் முயற்சிக்கின்றார்!– வாசுதேவ

229
vasudeva_nanayakkara
எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம். பெரேரா மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றன. தற்செயலாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் வெடிபொருட்ளை மீட்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உண்டு. அரசாங்கம் தனது குறைகளை மூடி மறைக்க எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்துகின்றது.

இந்த வெடிபொருட்கள் தொடர்பிலான உள்ளகத் தகவல்களை தெரிந்து கொண்டு அதனை மக்கள் முன் எடுத்துச் சென்றமைக்காக ஜீ.எல்.பீரிஸ் குற்றவாளியாகின்றார்.

அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கை அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும்.

விசாரணைகளின் ஊடாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகின்றது. வெடிபொருட்கள் மீட்பின் ஊடாக புலிகள் மீள தலைதூக்குவார்களா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு இந்த வெடிபொருள் மீட்பு பற்றிய விடயத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றது.

அரசாங்கத்தின் வருமானம் 9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. செல்வந்தர்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

SHARE