எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவ் விஜயத்தின் போது எதிர்க் கட்சித் தலைவருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் குழுவினர் உடன் விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில் அங்குள்ள குறைகளைக் கேட்டதன் பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிப்பதாகவும், மத்திய சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சருக்கு அவர்கள் உறுதியளித்தனர்.