
இந்த களஞ்சியசாலைகளும்,நெல்ஆலைகளும் கிளிநொச்சி, குருநாகல், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு களஞ்சியசாலைகள் அமைப்பதால் இந்த நாட்டு மக்களுக்கு தேவையான நெல்லினை களஞ்சியப்படுத்துவதோடு மட்டுமின்றி சதோச,கூட்டுறவு நிலையங்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான அரிசியினை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரிசி இறக்குமதியினை முற்றாக தடை செய்ய முடியும் எனவும் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நேற்று அம்பாறை கொஹம்பான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் விவசாயிகள் நெல்லினை விற்பதற்காக நாள்,பொழுது பாராமல் களஞ்சியசாலைகளுக்கு அருகில் காத்துக்கிடப்பார்கள். ஆனால் இன்று அவ்வாறான
நிலைமை இல்லை. நாம் 40, 50 விவசாயிகளுக்கு அடையாள அட்டை தந்து நெல்லினை கொள்வனவு
செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
அத்தோடு இன்று நெல்லைக் கொடுத்தால் நாளை விவசாயிகள் பணம் பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் 325 வியாபார மத்திய நிலையங்கள் ஊடாக நெல்லினை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் நெல் உற்பத்தியில் மட்டும் தங்கியிருக்காது அதை விட அதிகம் வருமானம் பெறும் உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் எனவும், இதற்காக விவசாயிகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஹரிசன் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கிராமிய தொழிற்துறை அமைச்சர் தயாகமகே,நெல் விற்பனை திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச முகாமையாளர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.