கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து வாழ்க்கையை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
மேஷம்
ராசிக்கல் பவளம் ஆகும், தீய சிந்தனைகளைநம் மனதில் இருந்து வெளியேற்றும். தொழில் முறையில் சிறந்து விளங்குவதற்கும், நல்லறிவு மற்றம் வாழ்வில் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.
ரிஷபம்
ராசிக்கல் பவளம். ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும். வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும்.
மிதுனம்
ராசிக்கல் மரகதம். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும், மாணவர்களுக்கு நல்ல கல்வி மற்றும் தொழில் வளத்தை கொடுக்கும்.
கடகம்
ராசிக்கல் முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். மிகுந்த அதிர்ஷடத்தை கொடுத்து வாழ்வில் வெற்றியை தரும்.
சிம்மம்
ரூபிகல் அணியவேண்டும். சிங்கத்தை அடையாளமாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன் ஆகும்.
கன்னி
மரகதம் கற்கள் அணியலாம். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும்.மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
துலாம்
வைரகற்கள் அணிலாம். நெஞ்சில் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
பவளகற்கள் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்
நீலக்கல் அணியலாம். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது. வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.
கும்பம்
செவ்வந்திக் கல் அணியலாம். இது அதிர்ஷ்டத்தை வழங்கும் மற்றும் ஒருவரைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலைத் தடுத்து பாதுகாப்பளிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம், செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.