பொதுவாக மோதிரம் அணிவது என்பது மனித விரல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணப் பெயர்கள் உண்டு. அவை,
1.கட்டை விரல்: இந்தவிரல் ஏனைய நான்கு விரல்களுள் மிகமிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்த விரலின் துணை இல்லாமல் மீதி உள்ள நான்கு விரல்களாலும் தனித்து எந்தக் காரியத்தையும் செய்திட இயலாது.
2. ஆள்காட்டி விரல்: இந்த விரலுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பது இந்த விரலின் பெயரிலேயே உள்ளது.
3.நடு விரல்: இந்த விரலுக்கு பாம்பு விரல் என்று மற்றும் ஒரு பெயரும் உண்டு.
4. மோதிர விரல்: இதனை RING FINGER என்று ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. இந்த விரல் மட்டும்தான் மோதிரம் போட்டுக் கொள்ள அங்கீகாரம் பெற்ற விரல்.
5. சுண்டு விரல்: ஏன் இந்த பெயர் இந்த விரலுக்கு வந்தது என்றால் பெருவிரலையும் இந்த விரலையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து விசை கொண்டு சுண்டுவதால் இப்பெயர் வந்தது.
ஆக மேலே சொல்லப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால் மோதிரம் அணிவது என்பது மோதிரவிரல் ஒன்றிற்கு மட்டுமே உரிமை உள்ள விரல் என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும்.
நடு விரல் என்று சொல்லப்படும் பாம்பு விரலில் மோதிரம் அணிந்து நீங்கள் செல்வீர்களேயானால் உங்களுக்கு நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நீங்களாகவே தடைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று பொருள் என்று ஒரு ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.