நடிகர்களுக்கு இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே அவர்களின் மதிப்பீடு கூறப்படுகிறது.
அண்மையில் நடிகை ஹன்சிகாவை பேஸ்புக்கில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 60 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, பேஸ்புக்கில் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். ரசிகர்கள் மனதில் எனக்கு உயர்வான இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.
எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது என மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.