தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பலரும் ரசிகர்களாக இருப்பது அஜித்திற்கு தான். இவர் எல்லோரிடத்திலும் மிக அன்பாக, எளிமையாக பழகக்கூடியவர்.
இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு தமிழ் சினிமாவில் முதல் நண்பர் அஜித் தான்.
நான் வாலி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்த போது, அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, மிகவும் நல்ல மனிதர் அவர்’ என்று கூறியுள்ளார்.