எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது – ஒஸ்தி ரிச்சா

284

சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன என தொடர்ச்சியாக இரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியளித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்.

ஆனால் அதன் பின் பட வாய்ப்புகள் சரியாக வராததால் சினிமாவை விட்டு விலகி எம்.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு படிக்கும்போதே ஜோவை என்பவரை சந்தித்து காதலில் விழுந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக ரிச்சா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரிச்சா 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE