எனக்கு பிடித்த நடிகர் அஜித்-ரஜினி, ஆனால் விஜய்- ஜுனியர் என்.டி.ஆர்

218

தெலுங்கு சினிமா முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமா மிகவும் பிடிக்கும். அவர்களும் நிறைய பேட்டிகளில் தமிழில் மிகவும் அற்புதமாக பேசி ரசிகர்கள் கவர்ந்திருக்கிறார்கள்.

இன்று ஜுனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஜெய் லவ குசா படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஜுனியர் என்.டி.ஆரிடம் தமிழ் சினிமா மற்றும் பிடித்த நடிகர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர், தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்கள் ரஜினி, அஜித். அவர்களது படங்களை திரையில் பார்ப்பது வேறொரு அனுபவம். அதோடு விஜய்யின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய வசந்த முல்லை பாடல் என்னுடைய பேவரெட் என்று கூறியுள்ளார்.

SHARE