எனக்கு மத நம்பிக்கையில்லை – மனோ

291

 

நாட்டிற்குள் ஒரு மதம், ஒரு மொழி, ஒரே இனம் என்று செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையினர் பல்லின, பல மதங்கள் மற்றும் பல மொழிகள் என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் அரசியல் அதிகாரத்திற்காக இனவாதத்தை பரப்பி வருகின்றனர்.

விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களுக்கு சென்றாலும் தனக்கு மதங்கள் எதுவும் இல்லை எனவும் மதங்களை தான் நம்புவதில்லை எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் நாட்டில் மீண்டும் தனிநாட்டை உருவாக்க முயற்சிப்பார்களா, தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுப்பார்களா என்ற நியாயமான கேள்வி சிங்கள மக்களுக்கு உள்ளது.

இவற்றுக்கு பதில் வழங்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பு எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE