மாப்பிள்ளை வீட்டார் விதித்த சில கட்டுப்பாடுகள் காரணமாக தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் பிரபல பின்னனி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வையற்றவரான இவர் தமிழ், மலையாளம் சினிமாக்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கும் கேரளாவின் கோழிக்கோடு அருகில் வசிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
இதை தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது திருமணம் நின்றுவிட்டதாக விஜயலட்சுமி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு பிறகு தனது இசை வாழ்க்கையை தொடர வேண்டாம் என சந்தோஷ் கூறுகிறார்
மேலும் இசை ஆசிரியராக என்னை பணியாற்ற வேண்டும் என அவர் சொல்கிறார்.
அதுமட்டுமில்லாமல், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்த சந்தோஷ், இப்போது தனது வீட்டில் தான் வாழவேண்டும் என மாற்றி பேசுகிறார்.
இப்படிப்பட்ட முரண்பாடுகள் கொண்டவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாததால் திருமணத்தை நிறுத்தியுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமிக்கு சமீபத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் கண்பார்வை திரும்ப கிடைத்தது குறிப்பிடத்தக்கது.