எனது நீண்ட நாள் தாகங்களில் ஒன்று இன்று நிறைவேறியது.-ரவிகரன்

350

தனது நீண்ட நாள் தாகங்களில் ஒன்று இன்று நிறைவேறியது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்துதல் நிகழ்வு தொடர்பில்  கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.அவரின் கருத்துக்களின் முழு வடிவம் வருமாறு,எனது நீண்ட நாள் தாகங்களில் ஒன்று இன்று நிறைவேறியது.

ravv.கௌரவ முதலமைச்சர் உள்ளடங்கலாக தாயகத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, உயிரிழந்த எங்கள் உறவுகளுக்காக, முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை நாளில் அஞ்சலி செலுத்தினார்கள்..இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் இணைந்து நின்ற அனைவருடனும் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்கிறேன்..இந்நிகழ்வை ஒழுங்கமைக்கும் போது கடும் நெருக்கடிகள்,அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. பல்வேறு மாற்றுத்திட்டங்களை சமநேரத்தில் முன்னெடுக்க வேண்டி இருந்தது..ஆனால் ஒருபோதும் பின்வாங்கவில்லை. எனக்கு இயற்கை தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியது மகிழ்ச்சி .

raraகடந்த ஆண்டுகளில் தனியாக நினைவு கூர்ந்தேன்..இன்று பலர் திரண்டு நினைவு கூர்ந்தோம்.இனி வரும் காலங்களில் இன்னும் பலர் திரளட்டும்..இன்று மீளத் துளிர்த்த இந்த மரபு வருகின்ற ஆண்டுகளில் ஏராளமான மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படட்டும்..தாயகத்தின் தேசிய வாழ்வு காக்கப்படட்டும்..என்றார்.மேலும் முள்ளி வாய்க்கால் நினைவாலயம் உள்ளிட்ட ,தாயகத்தில் நிறுவப்பட வேண்டிய அனைத்து நினைவுச் சின்னங்களையும், நிறுவும் தார்மீக பொறுப்பையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

SHARE