கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.
பின் இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 6 என அறிவிக்கப்பட்டதும் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான். இந்நிலையில் கௌதம் மேனனின் முந்தய படங்களில் பண பிரச்சனைகளால் இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து தொடர்பு கொண்ட போது கௌதம் மேனன் காலை 9.30 மணிக்கு லைகா நிறுவனத்தை சந்திக்க லண்டன் சென்றுள்ளாராம். இதனால் பண பிரச்சனைகள் தீர்க்கப்படுவதோடு படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு சனிக்கிழமை தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஒருவேளை பணப்பிரச்சனை லைகா நிறுவனத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டால் கௌதம் மேனன் அந்நிறுவனத்திற்கு அடுத்ததாக படம் செய்து கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.