என்கிரிப்ட் செய்யப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் கூகுளின் அதிரடி செயற்பாடு

248

உலகளவில் கோடிக்கணக்கான இணையத்தளங்கள் தற்போது பாவனையில் காணப்படுகின்றன.

இவற்றுள் பாதுகாப்பற்ற இணையத்தளங்களும் ஏராளம் இருக்கின்றன.

எனவே பயனர்களுக்கு பாதுகாப்பற்ற இணையத்தளங்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்வதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இவ் வசதியினை புதிதாக அறிமுகம் செய்துள்ள குரோம் 68 இணைய உலாவிப் பதிப்பில் உள்ளடக்கியுள்ளது.

குறித்த பதிப்பில் இணையத்தளங்களைப் பார்வையிடும் போது என்கிரிப்ட் செய்யப்படாத பாதுகாப்பற்ற இணையத்தளங்களை ‘Not Secure’ என அடையாளப்படுத்தி காண்பிக்கப்படவுள்ளது.

இவ் வசதி தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதத்தில் கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE