தாய்லாந்து நாட்டில் காரின் என்ஜினில் சிக்கிக் கொண்ட பாம்பினை, நபர் ஒருவர் தனது வாயால் கடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.Samut Prakarn மாகாணத்தில் நின்று கொண்டிருந்த காரின் என்ஜினிக்குள் பாம்பு ஒன்று மாட்டிக்கொண்டது. இதனால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஓட்டுநர் சிரமப்பட்டுள்ளார்.
அங்கிருந்த பாதுகாவலர்கள் பாம்பினை எடுப்பதற்கு போராடியும் அவர்களால் முடியவில்லை, இந்நிலையில் கம்போடியாவை சேர்ந்த Rathit, என்ற நபர் பாம்பினை தான் வெளியில் எடுப்பதாக கூறியுள்ளார்.
பாம்பின் வாலினை தன் வாயால் இறுக கடித்துக்கொண்டு வேகமாக இழுத்துள்ளார், இதில் பாம்பு வெளியில் வந்ததையடுத்து பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
ஆனால், காரின் என்ஜினிக்குள் எவ்வாறு பாம்பு புகுந்தது என்பது தெரியவில்லை என கார் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தெரியவில்லை என கார் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.