கபாலி படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ராதிகா ஆப்தே. இவர் எப்போதும் மிகவும் தைரியமாக, சர்ச்சையான கதாபாத்திரமாக தான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பார்.
பல நடிகைகள் நான் நடிக்க வரும் போது என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.
அப்படித்தான் ராதிகா ஆப்தேவிடம் ஒரு கேள்வியை முன் வைக்க ‘நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். நல்ல வேளை எனக்கு அது போன்று எதுவும் நடக்கவில்லை. என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்றார் ராதிகா.
மேலும், அதேசமயம் ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் அப்படி நடக்க முயன்றார், நான் ஆரம்பத்திலேயே அவரை தவிர்த்துவிட்டேன்’ என்றும் கூறியுள்ளார், இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த நடிகர் யார் என்பது? சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.