பிரபல தொலைக்காட்சியில் Office தொடர் மூலம் பிரபலமானவர் விஷ்ணு. சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டும் இருக்கிறது.
தற்போது விஷ்ணு, இவன் யாரென்று தெரிகிறதா என்ற பெயரில் ஒரு படம் நடித்திருக்கிறார். இப்படத்தை பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது அஜித் பற்றி கூறியுள்ளார்.
எனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும், கேரக்டர் ஒருபக்கம் இருந்தாலும் அவர் தன் உழைப்பாலேயே முன்னேறியதை பார்க்கும் போது நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன்.
வீரம் படத்தில் நடிக்க கூட வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பை எனது துரதிர்ஷ்டத்தால் தவற விட்டுவிட்டேன் என்றார்.