என்னுடைய முதல் காரை விஜய்யிடம் தான் முதலில் கொடுத்து ஓட்ட சொன்னேன்- பிரபல காமெடியன் நெகிழ்ச்சி

226

விஜய்யுடன் படத்தில் நடிப்பவர்கள் எப்போதும் அவரின் செயல்களை பற்றி புகழ்ந்து பேசுவர். அதோடு பேட்டிகளில் விஜய் தங்களுக்கு செய்த உதவிகளையும் சொல்லி தங்களது நன்றியை தெரிவிப்பர்.

அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில் காமெடி நடிகர் சூரி, விஜய் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ஜில்லா படத்தில் நடிப்பதற்கு முன் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தேன். மற்றவர்கள் நடிக்கும் போது அதைப் பார்த்து விஜய் மிகவும் ரசிப்பார்.

நான் முதன்முதலாக கார் வாங்கிய போது விஜய் சாரிடம் கொடுத்து தான் முதலில் ஓட்ட சொன்னேன். அவரும் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அதோடு இதைவிட பெரிய காரை விரைவில் வாங்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். விஜய்யை எல்லோரும் சொல்வது போல் அவர் மிகவும் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.

SHARE