என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர்!- நாமல் ராஜபக்ச

198

namal-rajapaksha

என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மைத்திரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது மட்டுமல்லாது மேலும் வழக்குகள் தொடரப்படும்.

என்னைக் கைது செய்ய வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புபட்டு பிணையில் விடுதலையானவராவார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் திருடர் என்பது புலனாகின்றது.

நாட்டில் இடம்பெற்ற கொலைகளில் 71 வீதமானவை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

அவ்வாறு என்றால் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள கள்வர்களையும் கண்டு பிடிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE