என்றென்றும் இளமைக்கு பாதாம் பேஷியல்

214

625-500-560-350-160-300-053-800-748-160-70

பெண்களுக்கு முகச்சுருக்கம் இருந்தால் வயதான நபர்களை போன்று காட்சியளிப்பார்கள்.

இதனை மறைப்பதற்காக நிறைய கிரீம்களை பயன்படுத்துவார்கள், இதற்கான பலன்கள் தற்காலிகமாக கிடைத்தாலும் அதன்பின்னர் வரும் ஆபத்துகள் ஏராளம்.

எனவே மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!

தேவையான பொருட்கள்
  • பாதாம் – 5
  • பால் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  • கடலை மாவு – 2 ஸ்பூன்
செய்முறை

முதலில் பாதாமை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பாதாம் பேஸியலை முகத்தில் தடவி 12 நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

இதனால் உங்கள் முகத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் இறந்த செல்களை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

இந்த பேஸியலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும்.

SHARE