வித்தியாசமான கதைக்காகவும், மிகவும் சவாலான வேடத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் சியான் விக்ரம்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான இருமுகன் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வருகிறது. இவர் எப்போதோ ஒரு பேட்டியில், சினிமாவில் இருக்க நாயகனாக மட்டும் இல்லை, எந்த ஒரு வேலையையும் செய்ய நான் தயார் என்று கூறியிருந்தார்.
அதை இப்போதும் கடைப்பிடித்து இருமுகன் படத்தின் படப்பிடிப்பில் மற்ற வேலைகளையும் செய்திருக்கிறார் விக்ரம். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.