என் உதவி எப்பொழுதும் கிடைக்கும்! சச்சின் உறுதி

184

31

கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தானுடைய உதவி எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தொடர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன்.

இந்திய கிரிக்கெட் அணியை தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திறம்பட வழிநடத்திச் செல்வார்.

அனில் கும்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது, நெருக்கடியான தருணங்களில் திறமையாக விளையாடுவது எப்படி என்பதை, அனில் கும்ளே, இந்திய வீரர்களுக்கு சொல்லித் தருவார் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

அனில் கும்ளே உடன் சக வீரராக கிரிக்கெட் ஆடியுள்ளதால், அவரது பாசிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் தெரியும். ஏறக்குறைய 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியுள்ள கும்ளே, பெரும்பாலும் திறமையாக ஆடி, வெற்றி பெறுவது எப்படி என்றே சிந்தனை செய்யக்கூடிய நபர் என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் உள்ளிட்டோர் அடங்கிய பிசிசிஐ தேர்வுக் குழுதான், அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE