என் கனவு நிறைவேறி விட்டது- மனம் திறந்த லட்சுமி மேனன்…

446

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதே அனைத்து ஹீரோயின்களின் விருப்பமும்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்க பல ஹீரோயின்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது.

இறுதியில் இக்கதாபாத்திரத்தை லட்சுமி மேனன் நடிக்க முன்வந்துள்ளார். இதை உறுதி செய்யும் பொருட்டு இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘அஜித் படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது, படப்பிடிப்பிற்கு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஏற்கனவே ஸ்ருதி இருப்பதால், இவர் தான் தங்கச்சி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

16-1429173911-ajith-lakshmimenon-600

SHARE