என் பெற்றோர்கள் சம்மதித்தால் நான் அதை செய்வேன் – டாப்ஸி

329

தனுஷின் ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் டாப்ஸி. அதன்பிறகு அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

பிரபல பைக் நிறுவனத்தின் அறிமுக விழாவில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது பேசிய டாப்ஸி, பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல, பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள்.

எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது, சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பைக் ஓட்ட தயாராக இருக்கிறேன். என் பெற்றோர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் சம்மதம் கிடைத்தால், தாராளமாக பைக் ஓட்டுவேன் என்று கூறியுள்ளார்.

taapsee_bike001

SHARE