தன் மகள் நடிகையாவதை விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா சுஷாந்த் சிங் ரஜ்புட் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.
இந்நிலையில் தனது மகள் நடிக்க வருவது பிடிக்கவில்லை என்று சயிப் தெரிவித்துள்ளார். இது குறித்து சயிப் அலி கான் கூறியிருப்பதாவது,
சாராவுக்கு எதுக்கு இந்த பிழைப்பு? அவர் எங்கு படித்திருக்கிறார் என்று பாருங்கள். அவர் படித்த படிப்புக்கு அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதை விட்டுவிட்டு நடிப்பு எதற்கு?
நான் நடிப்பு தொழிலை குறை சொல்லவில்லை. ஆனால் இது நிலையான தொழில் இல்லை. அனைவரும் எப்பொழுதும் பயத்துடன் வாழும் தொழில். நன்றாக நடித்தாலும் வெற்றி பெற முடியும் என்று கூற முடியாது.
நிலையற்ற தன்மை உள்ள இந்த வாழ்க்கையை பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும் என்று எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சாராவுக்கு நடிகையாவது தான் பிடித்துள்ளது.
சாரா எது பற்றி கேட்க வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். நாங்கள் பிற விஷயங்களை பற்றி பேசுவது போன்று படங்கள் பற்றியும் பேசுகிறோம் என்று சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.