என் வாழ்க்கையில் மிக மோசமான நேரம் அது.. 3 பிரச்சனைகள்.. டைவர்ஸ் பற்றி பேசிய சமந்தா

105

 

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக 2021ல் அறிவித்தனர். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின் சமந்தா மயோசிட்டிஸ் எனது நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற தொடங்கினார். தற்போது அதற்காக அவர் சினிமாவில் இருந்தும் பிரேக் எடுத்து இருக்கிறார்.

ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகள்
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் ஒரே நேரத்தில் மூன்று மோசமான விஷயங்களை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.

என் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் இருந்த நேரம் அது. Failed marriage, உடலில் பிரச்சனை, அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அதிலும் பாதிப்பு என ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகளை நான் சந்தித்தேன்.

அந்த நேரத்தில், இதற்கு முன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நடிகர்களின் வாழ்க்கையை பற்றி படித்தேன். அவர்கள் மீண்டு வந்தார்கள் என்றால் என்னாலும் முடியும் என நினைத்துக்கொண்டேன் என சமந்தா கூறி இருக்கிறார்

SHARE