தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசத்தை விரும்பும் பிரபலங்களில் ஒருவர் தான் பார்த்திபன். அவர் இப்போதெல்லாம் மிகவும் வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை ஈர்த்து வருகிறார்.
புதிய பாதையில் தொடங்கிய இவரது பயணம் இரவின்நிழல் வரை வந்துள்ளது. படங்களை தாண்டி ஒருவருக்கு பரிசு கொடுப்பது என்றாலும் வித்தியாசமாக கொடுப்பார்.இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட்டில் மொத்த திரைப்படத்தையும் இயக்கி சுமார் 100க்கும் மேற்பட்ட விருதுகளையும் பாராட்டையும் பெற்றார்.
மேலும், இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயாவா தூயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
அண்மையில் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடிய பார்த்திபனின் சொத்து மதிப்பு ரூ. 30 முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.