பிரபல FM நிகழ்ச்சி தொகுப்பாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கேரளா, திருவனந்தபுரத்தில் தனி வானொலி பண்பலையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜேஷ். ரசிகன் ராஜேஷ் என இவரை அழைப்பார்கள்.
இவர் பல குரல் பேசுவதில், கிராமிய பாடல்கள் பாடுவதிலும் கூட திறமையானவர். நிகழ்ச்சி முடித்துவிட்டு வழக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மதிய வேளையில் ஸ்டூடியோ திரும்பியுள்ளார்.
அப்போது சிவப்பு நிற காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் குட்டனை தாக்கியுள்ளனர். இதனால் ராஜேஷ் படுகாயமடைந்த சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
சமீபத்தில் வெளிநாடு சென்று நிகழ்ச்சி முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு மனைவியும் மகனும் இருக்கிறார்கள். அவரின் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.