(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் இன்று காலை இடம் பெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நிகழ்வில் கலந்த கொண்டு உரை ஆற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் ஆயிரக்கனக்கான எமது தமிழ் மக்கள் தினமும் எங்கயே ஒரு மூலையில் கண்ணீருடன்தான் வாழ்கின்றனர் என தொரிவித்தார்.
தொடர்ந்து உரை ஆற்றுகையில் தங்களுடைய பிள்ளைகளை காணவில்லை என தாய்மார்களும் தங்களது பிள்ளைகள் சிறைகளில் இருக்கின்றனர் நீண்டகாலம் ஆகியும் விடுதலை செய்யப்படவில்லை எனவும் இரணுவத்திடம் கையலிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற தொரியாது இன்றுடன் 600 நாட்கள் கடந்து 5 மாவட்டங்களில் பெற்றோர்கள் இரணுவத்திடம் கையலிக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகள் இருகின்றார்களா இல்லையா என்ற தெரியாமல் வீதிகளில் இருகின்றார்கள் அநுராதபுர சிறைச்சாலைகளில் 10 தொடக்கம் 24 வருடங்கள் சிறையில் இருக்கின்றவர்கள் எப்போது விடுதலையாகி வெளியே வருவார்கள் என்று இருக்கின்றார்கள் இன்னும் ஆயிரக்கனக்கானவர்கள் யுத்தகாலத்திலே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்களை இழந்து கண்ணீர் வடித்து கொண்டு இருக்கின்றார்கள் இவ்வாறான கெடிய யுத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் அவ் வீழ்ச்சியில் இருந்து மீண்டொல வேண்டும் என்றால் கல்வியின் மூலம் துறைசார்ந்த நிபுணர்களாக வருவதன் மூலமே யுத்தவடுக்களின் இருந்து நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் துறைசார்ந்த நிபுணர்களாக வருவது மட்டும் இன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எமது சேவையை வழங்க முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

